தமிழ்நாடு

tamil nadu

சொந்த செலவில் ஆக்சிஜன் வசதியுடன் அவசர ஊர்தி - அரசு பேருந்து ஓட்டுநரின் மனிதநேயம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் தனது சக தொழிலாளர்களுக்காக சொந்த செலவில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய அவசர ஊர்தி ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

By

Published : Jun 7, 2021, 10:39 PM IST

Published : Jun 7, 2021, 10:39 PM IST

tnstc driver donates ambulance
tnstc driver donates ambulance

மதுரை: சொந்த செலவில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய அவசர ஊர்தியை அரசு பேருந்து ஓட்டுநர் இலவசமாக வழங்கியுள்ளார்.

ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் ரங்கநாதன். இவர் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் தினக்கூலி ஓட்டுநராகவும் பிறகு நிரந்தர பணியாளராக 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். தனது பணியில் இதுவரை விபத்தே ஏற்படுத்தாத சிறந்த ஓட்டுநர் என பெயர் எடுத்தவர்.

இச்சூழலில், தனது குடும்பத்திற்காவும், வருங்கால தேவைக்களுக்காகவும் சேர்த்து வைத்திருந்த ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் நகைகளை விற்று ஆக்சிஜன் வசதிகொண்ட அவசர ஊர்தி சேவையை ரங்கநாதன் தொடங்கியுள்ளார்.

இதற்கு காரணம், சில ஆண்டுகளுக்கு முன்பு ரவிசங்கர் என்ற அரசு பேருந்து ஊழியர் நோய்வாய்ப்பட்டு இறந்தபோது, அவருடைய உடலை கொண்டு செல்லக்கூட பணம் இல்லாமல் கடைசியில் மாட்டுத்தாவணியில் ஒரு சிலரிடம் காசு வாங்கி எடுத்துச் சென்றதை துயரத்தோடு நினைவு கூறுகிறார்.

அதுபோன்ற நிலை பிற தொழிலாளர்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது. அந்தச் சம்பவத்தின் எதிரொலியாக தான் தனது பத்து வருட சேமிப்பை கொண்டு இந்த இலவச அவசர ஊர்தி சேவையை தொடங்கியிருப்பதாகவும், நோய்வாய்ப்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஆக்சிஜன் வசதயும் ஏற்டுத்தியுள்ளதாகக் கூறுகிறார்.

முழுக்க முழுக்க நலிவுற்ற அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களுக்காக இதை செய்துள்ளதாகவும், மருத்துவர்கள் காவல்துறையினர் இறந்தால் ரூ.25 லட்சத்தை தமிழ்நாடு அரசு வழங்குவது போல், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பணிக்காலத்தில் இறந்தால் 25 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

ஓய்வூதியதாரர்களின் பணப்பயன்கள், வாரிசுகளுக்கு வேலை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சருக்கு அரசு பேருந்து ஓட்டுநர் ரெங்கநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details