மதுரை: Madurai Curfew:தமிழ்நாடு அரசு, இன்று ஜனவரி 9ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் கண்காணிப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டத்தில் மட்டும் 2,100 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முழு ஊரடங்கையொட்டி, மதுரை மாவட்ட காவல்துறை பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
மாநகரில் 27 நிரந்தர சோதனைச்சாவடிகளில் மக்கள் யாரும் நடமாடுகிறார்களா வாகனங்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுகின்றனவா என்பது குறித்து சோதனை நடைபெறுகிறது.
ஊரடங்கால் வெறிச்சோடிய முக்கியப் பகுதிகள்
80 தற்காலிக சோதனை தடுப்பு வேலிகள் அமைத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து, மதுரையின் முக்கிய பகுதிகளான கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம், பழங்காநத்தம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும், ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைத்து வாகனங்களில் வருபவர்களைச் சோதனை செய்த பின்னரே, அனுப்பி வைக்கின்றனர். நேற்று ஒரு நாள் மட்டும் 314 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட கரோனா சிகிச்சை மையங்களில் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன.
இதையும் படிங்க: 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்குக் கரோனா பூஸ்டர் டோஸ் - நாளை முதல் தொடக்கம்