தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் விற்பனைக்கு வரும் ரெம்டெசிவிர்!

சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும், பொது பயன்பாட்டிற்கு ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு வருகிறது. உரிய ஆவணங்களை சமர்பித்து மருந்துகளை வாங்கிச் செல்லலாம் என, மதுரை அரசு ராசாசி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையை தொடர்ந்து மதுரையிலும் விற்பனைக்கு வரும் ரெம்டெசிவிர்
சென்னையை தொடர்ந்து மதுரையிலும் விற்பனைக்கு வரும் ரெம்டெசிவிர்

By

Published : May 8, 2021, 9:21 PM IST

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை செலுத்த அரசு பரிந்துரை செய்தது. இந்த நிலையில், அரசு மருத்துவமனையை தவிர தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மருந்து கிடைக்காமல், கள்ளச்சந்தையில் பல லட்ச ரூபாய் அளவிற்கு வாங்கும் நிலை ஏற்பட்டது.
இதனை தடுக்கும் வகையில், முதல்கட்டமாக கீழ்ப்பாக்கத்தில் தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் அம்மருந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், மற்ற மாவட்டங்களிலும் விரைவில் தொடங்கப்படும் என சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தென் மாவட்டங்களில் முதன்முறையாக மதுரை அரசு ராசாசி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது. இதனை மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்குமணி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக, அரசு மருத்துவக் கல்லூரிக்கு 500 பாட்டில் மருந்து விற்பனைக்கு வந்துள்ளதாகவும், ஒரு பாட்டில் மருந்து சுமார் ஆயிரத்து 568 ரூபாய் எனவும் தெரிவித்தார்.

மேலும் தேவைப்படும் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் மூலம் மருத்துவர் பரிந்துரை கடிதம், மருந்து வாங்குபவரின் ஆதார் அட்டை நகல், சிடி ஸ்கேன் பரிசோதனை சான்றிதழ் உள்ளிட்டவற்றின் நகலை சமர்பித்து பெற்றுக்கொள்ளலாம் எனவும், ஒரு நபருக்கு அதிகபட்சமாக ஆறு பாட்டில் மருந்து விற்பனை செய்யப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details