தமிழ்நாடு

tamil nadu

குடியரசு தினத்தன்று ஆர்எஸ்எஸ் தலைமையகம் முன்பு போராட்டம் - நந்தினி அறிவிப்பு

By

Published : Dec 19, 2020, 6:38 AM IST

மதுரை: அண்ணல் அம்பேத்கரின் மரணத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொடர்பு குறித்து முழுமையான விசாரணை நடத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக முன்னாள் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி அறிவித்துள்ளனர்.

குடியரசு தினத்தன்று ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகம் முன்பு போராட்டம்
குடியரசு தினத்தன்று ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகம் முன்பு போராட்டம்

இது குறித்து அவர் நேற்று (டிச.18) வெளியிட்டுள்ள காணொலியில், “இந்தியாவின் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் மரணத்தில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. அவரின் மரணத்தில் ஆர்எஸ்எஸ் இந்து அடிப்படைவாத அமைப்பின் தொடர்பு உள்ளது என்பது எங்களது ஆணித்தரமான குற்றச்சாட்டு.

இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்ற 2021ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்திய குடியரசு தினத்தன்று நாக்பூரிலுள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தின் முன்பு நானும், எனது தந்தை ஆனந்தனும் இணைந்து போராட்டம் நடத்தவிருக்கிறோம்.

முன்னாள் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, அவரது தந்தை ஆனந்தனுடன்

அண்ணல் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயல்பாட்டிற்கு வந்த நாள் என்பதால், இந்த நாளைத் தேர்ந்தெடுத்துள்ளோம். 1956 டிசம்பர் 6ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் திடீரென மரணமடைந்தார்.

இது குறித்து அப்போது வெளிவந்த விடுதலை பத்திரிகையில் அம்பேத்கரின் மரணம் குறித்து தந்தை பெரியார் சந்தேகம் எழுப்பியுள்ளார். அம்பேத்கரின் மரணத்தில் ஆர்எஸ்எஸ்ஸின் தொடர்புக்கு வலுவான காரணங்கள் உள்ளன. ஆகையால் அதனை விசாரித்து உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை நடத்தவுள்ளோம்” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :தமிழ்நாட்டில் தேர்தல் பணிகளை கண்காணிக்கும் தேர்தல் ஆணைய குழு!

ABOUT THE AUTHOR

...view details