தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உலக அஞ்சல் தினம் : அஞ்சலட்டை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர்

அஞ்சல் அட்டையின் பயன்பாடுகள் குறித்து தற்கால மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சமூக செயற்பாட்டாளரான இளைஞர் அசோக்குமாரின் செயல், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

postcard day special
postcard day special

By

Published : Oct 9, 2020, 10:00 PM IST

மதுரை :இன்று (அக்.09) உலகம் முழுவதும் அஞ்சல் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மதுரையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அசோக்குமார் இளைய தலைமுறை மாணவ, மாணவியருக்கு இலவசமாக அஞ்சல் அட்டை வழங்கி அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

இந்நிலையில், இது குறித்து ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அவரளித்த பேட்டியில், “நவீன தொழில்நுட்ப வசதிகள் வந்த பிறகு அஞ்சல் அட்டையின் பயன்பாட்டை முற்றிலுமாக மக்கள் மறக்கத் தொடங்கி விட்டனர். தற்போதுள்ள 40, 50 வயது தலைமுறையினரே அஞ்சல் அட்டையைப் புறக்கணித்துவிட்ட நிலையில், அதன் மகத்துவத்தை தற்போதுள்ள இளைய தலைமுறையினர் அறிந்துகொள்வது என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

அஞ்சலட்டையை விநியோகம் செய்யும் அசோக் குமார்

முன்பெல்லாம், ஒவ்வொரு வீட்டிலும் உள்ள நபர்கள் தங்களுக்கு கடிதம் வரும் நாள்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பர். ஆனால், இப்போது அது தலைகீழாக மாறிவிட்டது. இளைய தலைமுறையினருக்கு அஞ்சல் அட்டை மூலம் தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற அடிப்படையில், இன்று (அக்.09) மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அஞ்சல் அட்டையை இலவசமாக வழங்கி ஊக்குவித்து வருகிறேன். அஞ்சல் அட்டையில் பயன்பாடு வருங்காலத்தில் அதிகரிக்க வேண்டும் என்பதே, எனது இந்தப் பரப்புரையின் நோக்கம்” என்றார்.

சமூக செயற்பாட்டாளர் அசோக் குமார்

உலக அஞ்சல் தினம், 1969ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜப்பான் நாட்டின் டோக்கியோவிலுள்ள உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்திடம் இந்தத் திட்டத்தை, இந்தியத் தூதுக் குழுவின் உறுப்பினர் ஆனந்த் மோகன் நருலா முதன்முதலாக முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகளாவிய அஞ்சல் சேவைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக அஞ்சல் தினம் : அஞ்சலட்டை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர்

உலக அளவில் 150க்கும் மேற்பட்ட நாடுகள், உலக அஞ்சல் தினத்தை வெகு விமரிசையாக பல்வேறு வகையில் கொண்டாடி மகிழ்கின்றன. தங்கள் நாட்டின் அஞ்சல் ஊழியர்களை கௌரவித்தும் மகிழ்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details