மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (22). இவர் மீது மதுரை மாநகர் பகுதியில் ஐந்திற்கும் மேற்பட்ட கொலை, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இவர் நேற்று (டிச. 13) பொன்மேனி பகுதியில் தனது வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தபோது பயங்கர ஆயுதங்களுடன் வந்த அடையாளம் தெரியாத கும்பல் இவரை ஓடஓட விரட்டி வீட்டிற்குள் வைத்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்தப் படுகொலை முன்விரோதத்தின் காரணமாகவே அரங்கேறியதாகத் தெரியவந்துள்ளது.
முன்விரோதம்: மதுரையில் ரவுடி படுகொலை!
மதுரை: பொன்மேனி பகுதியில் முன்விரோதம் காரணமாக ரவுடியை வீடு புகுந்து கொடூரமாக வெட்டி கொலைசெய்த அடையாளம் தெரியாத நபர்களைக் காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
படுகொலை
மேலும் கொலை செய்தது யார் என்பது குறித்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 24 மணிநேரமும் ஆர்.டி.ஜி.எஸ் மூலம் பணம் அனுப்பலாம்: டிச., 14 முதல் அமல்!