தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கிடா முட்டு சண்டை போட்டி நடத்த வேண்டும் என உரிமை கோர முடியாது - உயர் நீதிமன்றம்

கம்பம் அருகே கிடா முட்டு சண்டை நடத்த அனுமதி கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கிடா முட்டு சண்டை போட்டி கண்டிப்பாக நடத்த வேண்டுமென யாரும் அடிப்படை உரிமையாக கோர முடியாது - நீதிபதிகள்
கிடா முட்டு சண்டை போட்டி கண்டிப்பாக நடத்த வேண்டுமென யாரும் அடிப்படை உரிமையாக கோர முடியாது - நீதிபதிகள்

By

Published : Jun 18, 2022, 9:00 AM IST

மதுரை: கம்பத்தை சேர்ந்த தர்வேஷ் முகைதீன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "தேனி மாவட்டம் கம்பம், அனிஷ் தோப்பு, மணிக்கட்டி ஆலமரம் பகுதியில் 2022 ஜூன் 26ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை கிடா முட்டு சண்டை நடத்த, கம்பம் டவுன் மேற்கு காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு 2022 ஜூன் 8ஆம் தேதி மனு அளித்தோம். இதுவரை எந்த ஒரு பதிலும் இல்லை.

எனவே, கிடா முட்டு சண்டை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் வாதத்தின் போது, ஏற்கனவே இப்பகுதியில் 2 முறை கிடா முட்டு சண்டை போட்டி நடத்த அனுமதி கேட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது, என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், கிடா சண்டை போட்டி நடத்த அனுமதி கோரிய வழக்கு எவ்வாறு பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்டது, என கேள்வி எழுப்பினார்.

மேலும் கிடா முட்டு சண்டை போட்டி கண்டிப்பாக நடத்த வேண்டுமென யாரும் அடிப்படை உரிமையாக கோர முடியாது, என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:ராஜசேகர் உடல் தாயாரிடம் ஒப்படைப்பு: பிரேத பரிசோதனை வீடியோ முழுமையாக இல்லை எனப் புகார்

ABOUT THE AUTHOR

...view details