மதுரை:இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நெய்வேலி அனல் மின் நிறுவனத்தில் பட்டதாரி நிர்வாக பயில்நர் (Graduate Executive Trainees) பதவிக்கான 300 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையை என்.எல்.சி அண்மையில் வெளியிட்டு இருந்தது.
ஏற்கனவே 2020ஆம் ஆண்டில் இதே பதவிக்கான பணி நியமனங்கள் நடைபெற்றன. ஆனால் 2022ஆம் ஆண்டில் தேர்வு முறைமையில் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. GATE 2022 மதிப்பெண் அடிப்படையில் தேர்வு பட்டியல் அமையும் என்று அறிவிக்கப்பட்டது. GATE 2022 தேர்வுகள் தகுதியாக நிர்ணயிக்கப்படும் என்று தெரிந்திருந்தால் பலர் தயாராகி இருப்பார்கள்.
ஆனால் போதிய அவகாசம் தரப்படாமலேயே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே GATE 2022 எழுதாதவர்கள் தேர்வு முறைமைக்கு வெளியே நிறுத்தப்பட்டுவிட்டனர். இது அநீதியானது. சமவாய்ப்பை மறுப்பது. ஏற்கெனவே தேர்வுப் பட்டியலில் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவம் கேள்விக் குறியாகி இருக்கிறது.