மதுரை:கன்னியாகுமரி மாவட்டம்நாகர்கோவிலை சேர்ந்த பெமிலா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "நாகர்கோவில் முட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து, என்னை பரமக்குடி நயினார் கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இடமாறுதல் செய்ததை ரத்து வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பணியிடமாறுதல் என்பது அரசு ஊழியர்கள் உரிமையாக கோர முடியாது. மனுதாரர் நிர்வாக காரணங்களுக்காகவே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.