மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ‘காவிரி மேலாண்மை வாரியத்தை முற்றிலும் பயனற்றதாக மாற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தடுக்காவிட்டால், காவேரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் அழிந்துவிடும் அபாயம் ஏற்படும். இந்நிலையில் கோதாவரி இணைப்பு திட்டமானது வெறும் கண்துடைப்புக்குத்தான்.
அரசியலுக்காக கொள்கையை சமரசம் செய்கிறார் முதலமைச்சர் - வைகோ சாடல்!
மதுரை: எட்டுவழிச்சாலை திட்டத்தில் முதலமைச்சர் அவரது அரசியலுக்காக கொள்கையை சமரசம் செய்து கொள்கிறார், ஆனால் அப்பகுதி மக்கள் இச்சமரசத்தை ஏற்க மாட்டார்கள் என வைகோ பேட்டியளித்துள்ளார்.
இயற்கை வேளாண்மை குறித்து நம்மாழ்வார் வழியில் விழுப்புரம் மரக்காணத்தில் இருந்து இராமேஸ்வரம் வரையிலும் 596 கிமீ தூரத்திற்கு மனிதச் சங்கிலி போராட்டம் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் பங்கேற்க உள்ளது. தனிநபர்களும் பொது மக்களும் இம்மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வள்ளுவன் வாக்கிற்கிணங்க எதிர்வரும் ஆபத்தைத் தடுக்காவிட்டால் வருங்கால சந்ததிகள் மாபெரும் இன்னல்களுக்கு ஆளாக்கப்படும்’ என்றார்.
முதலமைச்சர் எட்டுவழிச் சாலை திட்டத்தில் பொது மக்களுடன் சமரசம் செய்து அத்திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறியது குறித்த கேள்விக்கு, ‘முதலமைச்சர் எட்டு வழிச்சாலை திட்டத்தினை அமல்படுத்த அவரது கொள்கையை சமரசம் செய்து கொள்கிறார், அவரது அரசியலுக்காக! ஆனால் அப்பகுதி மக்கள் சமரசத்தை ஏற்க மாட்டார்கள்’ எனக் கூறினார்.