தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரை மலர்சந்தையில் வியாபாரம் மந்தம்

மதுரை: ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் மதுரை மலர் சந்தையில் பூ விலை குறைவாக இருந்தபோதிலும் வியாபாரம் மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

 மதுரை மல்லிகை
மதுரை மல்லிகை

By

Published : Jun 15, 2021, 3:37 PM IST

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள ஒருங்கிணைந்த மலர் சந்தையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 30 டன்னுக்கும் மேலாக பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தற்போது கரோனா பொது முடக்கம் என்பதால் உற்பத்தி செய்யப்பட்ட மலர்களுக்கு தற்போது போதிய விலை இல்லாததாலும், செடிகளை பராமரிக்காததாலும் பூக்கள் வரத்து பெருமளவு குறைந்துள்ளது. பூக்கள் சீசனின்போது மதுரை மல்லிகை கிலோ ரூபாய் 2500-க்கும் மேல் விற்பனையாகி விலை உச்சத்தில் இருக்கும்.

மதுரை மல்லிகை

தற்போது ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பூக்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வமும் மிகக் குறைந்து காணப்படுகிறது. சம்பங்கி ரூ.30, அரளி ரூ.100, செவ்வந்தி, மரிக்கொழுந்து மலர்கள் தலா ரூ.50-க்கும் இன்று விற்பனை செய்யப்பட்டன.

மதுரை மலர்சந்தையில் வியாபாரம் மந்தம்
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை சில்லரை வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், “போதிய விலை கிடைக்காத காரணத்தால் விவசாயிகள் விளைந்த பூக்களை பறிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் பூக்களை பறிப்பதற்கான கூலி கூட உத்தரவாதம் இல்லாததால் மலர்கள் அனைத்தும் செடிகளிலேயே கருக விடப்படுகின்றன.அதுமட்டுமன்றி தற்போது கோயில் திருவிழாக்கள், சுபகாரியங்கள் நடைபெறுவதும் தடை செய்யப்பட்டுள்ளதால் அதற்குச் செல்ல வேண்டிய மலர் விற்பனையும் சுத்தமாகக் குறைந்துவிட்டது. மலர் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்குத் தமிழ்நாடு அரசு நிவாரண உதவி வழங்கினால் நல்லது” என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details