தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உடற்கூராய்வுகளை வீடியோ பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

மதுரை: இனி அனைத்து உடற்கூராய்வுகளையும் தொடக்கம் முதல் முடிவுவரை வீடியோ பதிவு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற மதுரை கிளை

By

Published : Dec 3, 2020, 8:47 PM IST

மதுரை பேரையூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை செப்டம்பர் 16ஆம் தேதி காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், மறு நாள் அவர் வீட்டின் அருகிலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்தநிலையில் இருந்தார்.

இந்நிலையில் காவல் துறையினர் ரமேஷை அடித்து கொலை செய்து உடலை தூக்கில் தொங்கவிட்டதாக கூறி அவரது சகோதாரர் சந்தோஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

மேலும் மறு உடற்கூராய்வுக்கு உத்தரவிடுமாறும், விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றுமாறும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும்,


1.இறந்தவரின் உடலின் முன், பின் பகுதியை இறந்தவரின் உறவினர் அல்லது பிரதிநிதி பார்வையிட்டு வீடியோ, புகைப்படம் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

2.இறந்தவரின் உடலை உறவினர்கள் யாரும் பார்வையிடுவதற்கு முன்பு உடற்கூராய்வை தொடங்கக்கூடாது.

3.உறவினர்கள் இறந்தவர் உடலை பார்க்க மறுத்தால் நீதித்துறை நடுவர் உடற்கூராய்வுக்கு அனுமதி வழங்கலாம்.

4. உடற்கூராய்வை தொடக்கம் முதல் முடிவுவரை வீடியா பதிவு செய்ய வேண்டும்.

5.உடலில் இருந்து எடுக்கப்படும் ஒவ்வொரு உறுப்பையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

6. உடற்கூராய்வு அறிக்கை பெறப்பட்டதும் உறவினர்கள் நீதிமன்றம் செல்வதாக தெரிவித்தால் உடலை குறைந்தபட்சம் 48 மணி நேரம் பாதுகாக்க வேண்டும்.

7. உடல் உடனடியாக எரியூட்டப்பட்டால் இரண்டாவது உடற்கூராய்வு கோரிக்கை நிறைவேறாமல் போய்விடுகிறது. ஹத்ராஸில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் அவசரமாக எரியூட்டப்பட்டதால் சர்ச்சையானது அனைவருக்கும் தெரியும். இதுபோன்ற நிகழ்வுகளை பாதிக்கப்பட்டவர்கள் மனதில் நம்பிக்கை ஏற்பட காவல் துறையினர் தவிர்க்க வேண்டும் என உத்தரவில் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details