தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 25, 2022, 11:01 AM IST

ETV Bharat / city

"தண்ணீர் வினியோகம் சரியாக இல்லை" - மதுரை மாமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

வைகை உள்ளிட்ட பல்வேறு வகையிலும் அதிகபட்ச தண்ணீர் மதுரை மாநகராட்சியால் பெறப்பட்டாலும், போதுமான அளவு தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை என மாமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.

Etv Bharat
Etv Bharat

மதுரை:மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மேயர் இந்திராணி பொன் வசந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மேயர் பேசுகையில், ஒற்றுமையே வெற்றி தரும். இந்த மாமன்ற கூட்டத்தை சீரும் சிறப்புமாக நடைபெற வேண்டுமெனவும், மாமன்ற உறுப்பினர்கள் பொறுமையும் கண்ணியத்தையும் காக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

மாமன்ற கூட்டத்தில் அனைத்து கட்சியின் தலைவர்களுக்கு பேச வாய்ப்பளித்து, பின் மண்டல தலைவர்களை பேச அனுமதிக்க வேண்டுமென்று அனைத்துக் கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது அடுத்த கூட்டத்தில் பின்பற்றப்படும் என மேயர் தெரிவித்தார்.

அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று நேற்று நடைபெற்ற மதுரை மாமன்றக் கூட்டம்

தொடர்ந்து ல் எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா பேசும்பொழுது, மதுரைக்கு வைகையிலிருந்து 115 எம்.எல்.டி தண்ணீரும், வைகை படுகை மற்றும் காவிரி கூட்டுக் குடிநீர் என மொத்தம் 192 எம் எல் டி தண்ணீர் பெறப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அப்படி என்றால் மதுரை மாநகராட்சி முழுமைக்கும் 24 மணி நேரமும் தண்ணீர் கொடுக்கலாமே, ஏன் இயலவில்லை என கேள்வி எழுப்பினார்.

மேலும், காவிரி கூட்டு குடிநீரில் இருந்து 10 எம் எல் டி மட்டுமே நமக்கு பெறப்படும் நிலையில் 30 எம் எல் டி என அதிகாரிகள் தவறான தகவல்களை அளித்ததாக கூறினார். இதற்கு பதில் அளித்த ஆணையர், இது குறித்து உரிய முறையில் கணக்கீடு செய்து அதற்கான பதில் அளிக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் திமுக, அதிமுக, பாரதிய ஜனதா, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைக் கட்சிகளின் மாமனார் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:"நான் கடைசி வரை திரைப்படங்களில் நடித்துக் கொண்டே இருப்பேன்"... நடிகர் விக்ரம்

ABOUT THE AUTHOR

...view details