தமிழ்நாடு

tamil nadu

கடத்தப்பட்ட ஒன்றிய கவுன்சிலரை நீதிமன்றத்தில் முன்னிறுத்துங்கள்- உயர் நீதிமன்றம் உத்தரவு

கடத்தப்பட்ட திமுக ஒன்றிய கவுன்சிலரை நாளை நீதிமன்றத்தில் முன்னிறுத்த வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

By

Published : Jan 8, 2020, 11:15 PM IST

Published : Jan 8, 2020, 11:15 PM IST

Madurai branch of the High Court has ordered, abducted DMK union councilor be brought before the court, கடத்தப்பட்ட ஒன்றிய கவுன்சிலரை நீதிமன்றத்தில் முன்னிறுத்துங்கள்,  உயர் நீதிமன்ற மதுரை கிளை
கடத்தப்பட்ட ஒன்றிய கவுன்சிலரை நீதிமன்றத்தில் முன்னிறுத்துங்கள்

மதுரை: கடத்தப்பட்ட திமுக ஒன்றிய கவுன்சிலரை நாளை நீதிமன்றத்தில் முன்னிறுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த ராஜா, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “என் தந்தை சாத்தையா சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் எட்டாவது வார்டு திருவரங்கத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

ஜனவரி 3ஆம் தேதி காலை 5 மணியளவில் நண்பர்களைச் சந்திப்பதற்காக வெளியில் சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை. இதனால், அவரது தொலைபேசிக்கு எனது தாய் தொடர்பு கொண்டார். அப்போது, அதிமுகவைச் சேர்ந்த தர்மரும் அவரின் கூட்டாளிகளும் தந்தையை அவர்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறியுள்ளனர்.

சென்னை வேளச்சேரியில் இருந்து விமான நிலையத்துக்குப் புதிய ரயில் பாதை!

இதைத்தொடர்ந்து நாங்களும், திமுகவினரும் எனது தந்தையை மீட்டுத் தருமாறு முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் முறையிட்டு புகார் அளித்தோம். ஆனால் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வேளையில் ஆறாம் தேதி எனது தந்தையை அழைத்து வந்து பொறுப்பேற்கச் செய்தனர்.

பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டுகள் சப்ளை - மூன்று பேர் கைது

அப்போது என் தந்தையை சந்திக்க முயன்றேன். ஆனால், சுற்றியுள்ளவர்கள் தடுத்துவிட்டனர். பதவியேற்பு முடிந்ததும், என் தந்தையை வலுக்கட்டாயமாக அதிமுகவினர் அழைத்துச் சென்றனர். எனது தந்தையை அதிமுகவினர்தான் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளனர். நீதிமன்றம் தலையிட்டு அதிமுகவினரின் கட்டுப்பாட்டில் உள்ள எனது தந்தையை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

'தர்பார்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசு!

இந்த மனு இன்று நீதிபதிகள் ராஜா, புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘‘சாத்தையா யாருடைய சட்டவிரோத காவலிலும் இல்லை’’ எனக் கூறப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரரின் தந்தையான திமுக கவுன்சிலரை நாளை நீதிமன்றத்தில் நேரில் முன்னிறுத்த வேண்டும் என காவல் துறையினருக்கு உத்தரவிட்டனர்.

'திரௌபதி படத்தைத் திரையிடக் கூடாது ' - திரையரங்கு உரிமையாளர்களிடம் விசிகவினர் மனு

அது தவறும் பட்சத்தில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராக வேண்டும் என எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details