தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆய்வகத் தொழில்நுட்பனர்கள் நிலை 2 பதவி உயர்விற்கு இடைக்காலத் தடை!

மதுரை: நிலை 2 (Grade 2) ஆய்வகத் தொழில்நுட்பனர்கள் பதவி உயர்வு தொடர்பான அறிவிப்பிற்கு இடைக்காலத் தடைவிதித்து, மருத்துவக்கல்வித் துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 23ஆம் தேதிக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

By

Published : Feb 24, 2021, 8:29 AM IST

madurai branch
madurai branch

அரசு பட்டய மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்ப சங்கத்தின் பொதுச்செயலாளர் ஷாஜகான் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.

அதில், "ஆய்வக தொழில்நுட்பனர் நிலை 2 (Grade 2)இல் 10 ஆண்டுகளாகப் பணிபுரிபவர்கள் விதிப்படி நிலை 1-க்கு (Grade 1) பதவி உயர்வு பெற தகுதியானவர்கள். அவ்வாறு பதவி உயர்வு வழங்கப்படுகையில், மாநில அளவிலான பணிமூப்பு அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி பதவி உயர்வு வழங்கப்படும்.

இந்நிலையில் 112 பேருக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது தொடர்பாக கலந்தாய்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதுபோன்ற கலந்தாய்வு எதுவும் நடத்தப்படாமல் 112 பேருக்கும், நிலை 2 (Grade 2) ஆய்வகத் தொழில்நுட்பனர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே பதவி உயர்வு தொடர்பான அறிவிப்பை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும். அதனடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள தடைவிதித்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம். ரமேஷ், ஆய்வகத் தொழில்நுட்பனர்கள் பதவி உயர்வு தொடர்பான அறிவிப்பிற்கு இடைக்காலத் தடைவிதித்தும், மருத்துவக் கல்வித் துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டும் வழக்கு விசாரணையை மார்ச் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளின் இழப்பீடுத் தொகையை நாங்கள் தருகிறோம் - உலக சுகாதார அமைப்பு

ABOUT THE AUTHOR

...view details