மதுரையைச் சேர்ந்த ரோப்சிங் ராபின்சிங் ராஜ்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், "இந்திய அரசால் 1992ஆம் ஆண்டு ‘தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு’ (NACO) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு உலகம் முழுவதும் இருந்து கோடி கணக்கில் நிதி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிதி எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாட்டு குழுவிற்கு நிதி கொடுத்து எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
ஆனால், எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் நிதி முறையாக பயன்படுத்தப்படுவதில்லை, முறையான கணக்குகள் பராமரிக்கப்படுவதில்லை. எனவே, எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கும் நிதியை சிபிஐ மூலம் முதல்கட்ட விசாரணை மேற்கொள்ள உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கு குறித்து சிபிஐ மற்றும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க...முதலமைச்சர் குறித்து ஆதாரமற்ற விமர்சனங்கள் வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - உயர் நீதிமன்றம்