தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 19, 2020, 6:50 PM IST

ETV Bharat / city

'கரோனாவை திமுக அரசியலாக்க பார்க்கிறது' - அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை: கரோனா வைரஸ் பரவலை திமுக அரசியலாக்க பார்க்கிறது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ
அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை மேற்குத் தொகுதி மக்களுக்கு கரோனா நிவாரண பொருள்களை தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வழங்கினார். அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவல்துறையினர், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், மக்கள் நல்வாழ்வுத்துறையின் உதவிகள் உடன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அளித்துவருகிறோம் எனத் தெரிவித்தார். அதையடுத்து பேசிய அவர், கரோனா பாதுகாப்பிற்காக 12 உயர்மட்ட குழுக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். அந்தக் குழுகளின் முடிவுகளைப் பொறுத்தே 20ஆம் தேதி ஊரடங்குத் தடை தளர்வுகள் முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ

அதைத்தொடர்ந்து பேசிய அவர், எதிர்க்கட்சிகள் என்றால் விமர்சனம் செய்வது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியான திமுக, கரோனா வைரஸை அரசியலாக்க பார்க்கிறது. அப்படி பார்க்காமல் மக்களின் நலனை மட்டுமே பார்க்க வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக கரோனா நடவடிக்கைகள் குறித்து பல குறைகளை கூறி வருகிறார். அதற்கு சரியான நேரம் இது அல்ல எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'திருவாரூரில் குணமடைந்த 8 கரோனா நோயாளிகள்' - அமைச்சர் காமராஜ் மகிழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details