விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஆரோக்கியம் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில், “அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் அரசு பணியாளர் விதிமுறைப்படி மத ரீதியான அமைப்புகளில் நடைபெறும் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் பதவி வகிக்கக் கூடாது என்றும் விதிமுறை உள்ளது. ஆனால், தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) நிர்வாகத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என பலரும் மத ரீதியான சங்கங்களில் நடத்தப்படும் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். நிர்வாகிகளாக பலர் பதவிகளில் உள்ளனர்.
எனவே, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மதம் தொடர்பான நிர்வாக பணி தேர்தலில் பதவி வகிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும். அத்துடன், போட்டியிட இனி நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தார்.