மதுரை தனியார் விடுதியில் அகில இந்திய இமாம் கவுன்சில் தலைவர் சம்சுல் இக்பால் தாவூத் தனது நிர்வாகிகளுடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசுகையில், பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபிறகு இந்தியாவில் மக்கள் விரோத போக்கு அதிகரித்துள்ளது. தேசிய மக்கள் பதிவேடுச் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டங்கள் மூலம் நாட்டில் பரபரப்பான நிலையுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் மதத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களிடையே பிரிவினையை, வெறுப்பை அதிகமாக்கும் வகையில் பாஜக அரசு சட்டத்தை இயற்றியுள்ளது. மத்திய அரசு தேசிய மக்கள் பதிவேடு சட்டத்தை தேசத்தில் எந்தப்பகுதியிலும் அமல்படுத்தக்கூடாது என கோரிக்கை விடுக்கிறோம். குடியுரிமை திருத்த சட்டம் ஜனநாயகத்தை, அரசியலமைப்பை அசைத்துப்பார்க்கும் வகையில் உள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் மிக முக்கியமான பாகம். மதத்தை குறிப்பிட்டு குடியுரிமை வழங்குவது இந்திய வரலாற்றில் இதுவரை நிகழ்ந்ததில்லை. அதனை தற்போது பாஜக செய்துள்ளது.
#CAA PROTEST டெல்லியில் மயானா அமைதி நிலவுகிறது - தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு குற்றச்சாட்டு!
இஸ்லாமிய சமூகத்தை புறக்கணிக்கும் வகையில், இந்து ராஜ்ஜியத்தை பரப்ப வேண்டும், இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக மாற்ற வேண்டும் என பாஜக முயற்சித்து வருகிறது. குடியுரிமை போராட்டத்தில் ஈடுபடக்கூடிய மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை அடக்குமுறைகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர்.