மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றாவது வட்டத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ பாலச்சாமி சித்தர் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் குருபூஜை விழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் குருபூஜை விழாவும், அன்னதான நிகழ்வும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ பாலச்சாமிகள் மட ஆலய 102ஆவது குருபூஜை! 1000 பேருக்கு அன்னதானம்!
மதுரை: அலங்காநல்லூரில் உள்ள ஸ்ரீ பாலச்சாமிகள் மட ஆலய 102ஆவது குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீ பாலச்சாமிகள் மட ஆலய 102ஆவது குருபூஜை
அப்போது மலர் மாலை, வண்ண பூக்களால் சிவ லிங்கம் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் தேங்காய், பழம், சந்தனம், வில்வ இலை, போன்றவை லிங்கத்துக்கு படைத்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதையடுத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக பால், பழச்சாறு, உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், பொதுமக்கள் கலந்து ஜீவ ஜோதியை வணங்கி சிவ வழிபாடு செய்தனர்.