தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுக எம்எல்ஏ வீட்டில் திருட முயன்ற கொள்ளையன் கைது!

மதுரையில் அதிமுக எம்எல்ஏ வீட்டில் திருட முயற்சித்த திருடன் கைதுசெய்யப்பட்டார்.

By

Published : Oct 8, 2020, 3:55 AM IST

மதுரை: சோழவந்தான் தொகுதி அதிமுகவின் எம்எல்ஏ மாணிக்கத்திற்கு சொந்தமான வீடு மதுரை பாண்டி கோயில் குறிஞ்சி நகர் பகுதியில் அமைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு அவர் வீட்டில் திருட முயன்ற கொள்ளையன் வீட்டில் ஆள்களின் நடமாட்டம் இருப்பதை பார்த்து தப்பியோடி உள்ளார்.
இந்நிலையில் கொள்ளை முயற்சி தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அண்ணாநகர் காவல்துறையினர் எம்எல்ஏ வீட்டில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தினர்.

இதில், கொள்ளையில் ஈடுபட்டது மதுரை சக்கிமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெஞ்சமின் என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த கொள்ளையனை காவலர்கள் பாண்டி கோயில் அருகே கைதுசெய்தனர்.

மேலும் அந்நபர் மதுரை வளர் நகர், அண்ணாநகர் பகுதிகளில் பல்வேறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து 44 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்யப்பட்டது. திருடனை காவலர்கள் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தேவாலயத்திலிருந்து ரூ.20,000 திருட்டு!

ABOUT THE AUTHOR

...view details