தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கிடுகிடுவென உயர்ந்த வைகை,மஞ்சளாறு அணைகளின் நீர்மட்டம்- கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக, தேனியிலுள்ள வைகை , மஞ்சளாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில் 2ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாயம்
வெள்ள அபாயம்

By

Published : Jul 30, 2022, 12:38 PM IST

தேனி: கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால், வைகை அணியின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணைக்கு நீர் வரத்து 2,288 கன அடியாக இருப்பதால் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டக்கூடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (ஜூலை30) காலை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியது. இதைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் வைகை அணைக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். மேலும், கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர்மழையின் காரணமாக அங்கு நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் இன்று அணையின் முழு கொள்ளவான 57 அடியில் 53 அடியை எட்டியதால் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதிகளான தேவதானபட்டி, கெங்குவார்பட்டி, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுப்பணித்துறையினர் இன்று (ஜூலை30) இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

மேலும் இந்த ஆண்டு பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக அணையின் முழு கொள்ளாவன 57 அடியில் 55 அடியை எட்டியவுடன் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து அணைக்கு வரும் உபரி நீர் அனைத்தும் அப்படியே வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது அணைக்கு நீர் வரத்தானது, 272 கன அடியாக உள்ளது. இந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழையின் போது 2வது முறையாக அணை நிரம்பி வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: வைகையில் தடுப்பணை கட்ட ஆற்று மணலையே சுரண்டுவதா...? - கொந்தளிக்கும் சூழலியல் ஆர்வலர்கள்

ABOUT THE AUTHOR

...view details