தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ஆடு விற்பனை அமோகம்!

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ஆடு விற்பனை அமோகமாக நடந்தது. வெள்ளாடு விலை ரூ. 500 முதல் 1,000 வரை விலை உயர்ந்து விற்பனையானது.

புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ஆடு விற்பனை அமோகம்
புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ஆடு விற்பனை அமோகம்

By

Published : Apr 15, 2022, 9:13 AM IST

ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தை வாரம்தோறும் வியாழக்கிழமை நடக்கும். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடு, மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. இங்கு 50 லட்ச ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும்.

பங்குனி மாதத்தில் ஆடு, மாடு விற்பனை மந்தமாக இருந்த நிலையில், சித்திரை மாதம் கொங்கு மாவட்டங்களில் திருவிழாக்கள் அதிகம் நடப்பதால், விற்பனை சூடுபிடித்தது. இந்த நிலையில் நேற்று(ஏப். 14) தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு கூடுதல் விற்பனை நடந்தது. கூடிய சந்தைக்கு 500-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள், 400-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன.

ஆடுகளின் விலை ரூ. 500 முதல் ரூ.1,000 வரை உயர்ந்தது. கடந்த வாரம் நிலவரப்படி 10 கிலோ எடைக்கொண்ட வெள்ளாடு ரூ. 6,000 வரை விற்பனையானது. நேற்று, ரூ. 7,000 வரை விற்பனையானது. மொத்தமாக ரூ. 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது.

இதையும் படிங்க: 'மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் - பி.ஆர். பாண்டியன்'

ABOUT THE AUTHOR

...view details