ஈரோடு: சென்னிமலை, அரச்சலூர், மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கலன்று பூப்பறிக்கும் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, கரோனா தொற்றின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாடுகளால் இவ்விழா கொண்டாடப்படவில்லை.
இந்த ஆண்டு பூப்பறிக்கும் திருவிழா நேற்று (ஜனவரி 15) நடைபெற்றது.
சென்னிமலை அருகே உள்ள தொட்டம்பட்டி, பள்ளக்காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்த பதின்பருவப்பெண்கள் மற்றும் குழந்தைகள் வனப்பகுதிக்குச் சென்று ஆவாரம் பூக்கள், மல்லிகை மற்றும் கனகாம்பரம் உள்ளிட்டப் பூக்களைப் பறித்து மகிழ்ந்தனர்.
பின்னர், அவர்கள் கொண்டு சென்ற கரும்பு, பொங்கல், பொரிகடலை உள்ளிட்ட தின்பண்டங்களை உண்டு மகிழ்ந்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், பூப்பறிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றதில் அப்பகுதி மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க:10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு