தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.7,777-க்கு விற்பனை!

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், விராலி மஞ்சள் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் 7 ஆயிரத்து 777 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Erode turmeric
Erode turmeric

By

Published : May 13, 2022, 5:05 PM IST

ஈரோடு: ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்களுக்கு மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது.

அதில், ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, நாமக்கல், கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மஞ்சள் விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தற்பொழுது மஞ்சள் அறுவடை தொடங்கியுள்ளதால், கொப்பரைகளில் வேகவைத்து, பின்னர் அதை வெயிலில் உலர்த்தி, அரவைக்கு தயாரான நிலையில் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர்.

வாரத்தின் இறுதி நாளான இன்று(மே 13) நடைபெற்ற ஏலத்தில், விராலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக 7 ஆயிரத்து 777 ரூபாய்க்கும், குறைந்தபட்சம் 5 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் ஏலம் சென்றது. கிழங்கு மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக 6 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 5 ஆயிரத்து 89 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தமாக இன்று 2 ஆயிரத்து 402 மஞ்சள் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. இதில் 815 மஞ்சள் மூட்டைகள் விற்பனையானது. இந்த வாரம் பெரியளவில் விலை ஏற்றங்கள் ஏதுமின்றி ஏலம் நடைபெற்றது.

இதையும் படிங்க: ரத்து செய்யப்பட்ட அகவிலைப்படியை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details