தமிழ்நாடு

tamil nadu

பத்ரகாளியம்மன் கோயிலில் தீ மிதித் திருவிழா

By

Published : Mar 11, 2020, 3:47 PM IST

ஈரோடு: பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற குண்டம் விழாவில், பக்தர்கள் பலர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஈரோடு பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா
ஈரோடு பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா

ஈரோடு மாவட்டம், கள்ளுக்கடைமேடு பகுதியிலுள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தின் போது குண்டம் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான மாசி மாத குண்டம் விழா, கடந்த மாதம் 24ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து சிறப்புப் பூஜைகள், மூலவர் வீதி உலா, பக்தர்களின் நேர்த்திக்கடன் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் இருந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதித்தல் நிகழ்வு நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், பூஜைகளும் நடைபெற்றன.

ஈரோடு பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா

குண்டம் விழாவில் பல்வேறு பக்தர்கள், தீயில் இறங்கி நடந்து தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். இவ்விழாவில் ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க; 'கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாநிலமாக மாறிய தமிழ்நாடு'

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details