ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோடு சாலைப் போக்குவரத்து மற்றும் பொறியியல் கல்லூரி, கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 24 மணி நேர காவல் துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு
ஈரோடு: வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றவிருக்கும் தேர்தல் பணியாளர்களுக்குச் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடவிருக்கும் நுண் பார்வையாளர்கள், மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு, பணியாற்றவிருக்கும் தொகுதி ஒதுக்கீட்டிற்கான பணி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்டத் தேர்தல் அலுவலர் சி. கதிரவன் பங்கேற்று தேர்தல் பணியில் ஈடுபட இருக்கும் பணியாளர்களுக்கு கணினி சுழற்சிமுறையில் பணி ஒதுக்கீடுசெய்தார்.
இதில் தேர்தல் அலுவலர்கள் அடோனு சாட்டர்ஜி, மணிஷ் அகர்வால், பிரசாந்த் குமார் மிஸ்ரா, நர்புவாங்டி பூட்டியா, அன்னபூரணி, சில்பா, ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.