தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 18, 2020, 3:34 PM IST

Updated : Nov 18, 2020, 4:17 PM IST

ETV Bharat / city

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்தா?

ஈரோடு: 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா என்பது குறித்து டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

sengottaiyan
sengottaiyan

கோபிச்செட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட குள்ளம்பாளையம், பா.வெள்ளாளபாளையம், நஞ்சைகோபி, வெள்ளாங்கோயில் உள்ளிட்ட 8 ஊராட்சிகளில் ஜீவன ஜல் சக்தி மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல்முறையாக மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கென 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு கலந்தாய்வு நடைபெறுகிறது.

முதலமைச்சரின் சிறப்பான இந்த திட்டம் மூலம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு எளிமையாகி உள்ளது. காலிப்பணியிடங்களை நிதிநிலைக்கு ஏற்ப நிரப்பி வருகிறோம். ஐஐடி பயிற்சி நிறுவனம் சார்பில் திங்கட்கிழமை டெல்லியில் இருந்து வரும் குழுவுடன் ஆலோசனை நடத்தி பொதுத்தேர்வுகளுக்கான பயிற்சிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்தா?

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா என்பது குறித்து டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவு செய்யப்படும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து அரசுதான் முடிவு செய்யும். ஜனவரியில் அரசு நடத்தும் பட்டயக் கணக்காளர் பயிற்சி வகுப்பில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் ” எனக் கூறினார்.

இதையும் படிங்க:எம்பிஏ எம்சிஏ படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு!

Last Updated : Nov 18, 2020, 4:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details