ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் நகராட்சியில் பணிபுரியும் மகளிர் 50 பேருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம், 9 சிறு வணிகர்களுக்கு கடனுதவி உள்ளிட்ட ரூ.13.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செய்து வருகிறார். ஆண்டுதோறும் ஒரு லட்சம் மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுவருகிறது.
கோபியில் உள்ள ஏரியில் விரைவில் படகு இல்லம் அமைத்து சுற்றுலாத்தலமாக மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சித்தோடு-கோபி நான்கு வழிச்சாலை அமைக்க டெண்டர் வழங்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும்.