மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், ஈழத் தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல் துறையினர் தடியடி நடத்தியதை கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள், எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
தருமபுரி:
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தருமபுரியில் ஜமாஅதுல் உலமா சபை சார்பில் 1,500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:
திருவாரூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி 1,500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற போராட்டக்காரர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.
திருவாரூரில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் நீலகிரி:
இந்நிலையில் உதகையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கண்டன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் இஸ்லாமியருக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாகவும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
நீலகிரியில் போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் கரூர்:
கரூர் மாவட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைகளில் தேசியக் கொடியை ஏந்தி தமிழ்நாடு அரசு, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தினர். மேலும் இந்தப் போராட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக கரூர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டனர்.
கரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட உலமாக்கல் சார்பாக திமுக, அமமுக, எஸ்டிபிஐ உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இணைந்து குடியுரிமை திருத்தச் சட்டம், வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டது உள்ளிட்டவற்றைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற இஸ்லாமியர்கள் போராட்டம் ஈரோடு:
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் ஈரோடு மாவட்ட இஸ்லாமியர்கள் கூட்டமைப்பின் சார்பில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் இதையும் படிங்க: முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தம் - அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி