தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈரோட்டில் தொடர் வழிப்பறியில்  ஈடுபட்ட இருவர் கைது..! - chain snatchers arrested in erode

ஈரோடு: தொடர் நகைப் பறிப்பில் ஈடுபட்டு வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து 30 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

chain snatchers arrested in erode

By

Published : Nov 18, 2019, 3:21 AM IST

ஈரோட்டில் கடந்த 9ஆம் தேதியன்று நகரின் பல்வேறு பகுதிகளில் நடந்து சென்ற பெண்களிடம் அடையாளம் தெரியாத நபர்கள் நகைப்பறிப்பில் ஈடுபட்டதாகக் காவல்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நகைப் பறிப்பில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தேடி வந்தனர்.

இதுதொடர்பாக ஈரோடு நகர காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற வழிப்பறி தொடர்பாக கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் பொதுமக்கள் உதவியுடனும் காவல்துறையினர் விசாரணை நடத்தி நகை பறிப்பு தொடர்பாக ஈரோடு மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த், லோகேஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 30 சவரன் நகைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோவிலுக்குச் செல்லும் வழியில் விஷவண்டு தாக்கியதில் பக்தர்கள் படுகாயம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details