திருப்பூர் மாவட்டம் பெருமாள் நல்லி வலசு பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மணப்பாறையிலுள்ள வீரப்பூர் கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்தனர்.
செல்லும் வழியில் கரூர் மாவட்டம் மாயனூர் அருகே உள்ள சங்கரமலைப்பட்டி பகுதியில் சங்கரலேஸ்வரர் சுவாமி ஆலயத்திற்கு மலை மீது ஏறிச் சென்றபோது திடீரென மரத்தில் இருந்த கதண்டு வண்டு அவர்களை கடிக்க தொடங்கியதில் அங்குள்ளவர்கள் பயந்து ஓடினர்.
இதில் கதண்டு கடித்து 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள சேங்கல் மருத்துவமனையிலும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இயற்கையை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு போட்டி!