தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விபத்துக்குள்னான விமானத்தை வீடியோ எடுத்தவர்களின் செல்போன்கள் ஆய்வு - குன்னூர் தனிப்படை காவல்துறை

ராணுவ ஹெலிகாப்டர் விழுவதற்கு முன்பு வீடியோ எடுத்த இருவரின் செல்போன்கள் தேவைப்பட்டால் ஆய்வு செய்யப்படும் எனத் தனிப்படை காவல்துறை தெரிவித்துள்ளனர்.

ஹெலிகாப்டர் விபத்துக்கு முன் அதை வீடியோவாக எடுத்தவர்கள்
ஹெலிகாப்டர் விபத்துக்கு முன் அதை வீடியோவாக எடுத்தவர்கள்

By

Published : Dec 12, 2021, 6:27 AM IST

நீலகிரி:காட்டேரி வனப்பகுதியில் கடந்த டிச. 8 ஆம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் முப்படை தலைமை தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், விபத்து நிகழ்வதற்கு கடைசி சில நொடிகளுக்கு முன்பு, கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோ(joe) என்பவரும் அவருடைய நண்பர் நாசரும், வீடியோ எடுத்துள்ளனர்.

அன்றைய தினம் குழந்தைகளுடன் சுற்றுலா சென்றபோது ரயில் தண்டவாளத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது ஹெலிகாப்டர் ஒன்று பறந்து வருவதைப் பார்த்தும், அவர்கள் அதனை வீடியோ எடுக்கும் பொழுது அந்த ஹெலிகாப்டர் பனி மூட்டத்திற்குள் சென்ற 4, 5 நொடிகளில் வெடிக்கும் சத்தம் கேட்டதுள்ளது.

செல்போனில் வீடியோ ஆய்வு - முழு ஒத்துழைப்பு

இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஹெலிகாப்டர் விபத்தை விசாரிக்கும் குன்னூர் தனிப்படை காவல்துறை, நாசர் மற்றும் அவரது நண்பர் ஜோவிடம் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.

எப்போது வீடியோ எடுக்கப்பட்டது? யார் யார் வீடியோ எடுத்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்திய காவல்துறை, செல்போனில் வீடியோ எடுக்கப்பட்டது குறித்து ஆய்வுக்குத் தேவைப்பட்டால் இருவருடைய செல்போன்களைத் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு அவர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:மக்களுக்கும், ஸ்டாலினுக்கும் விமானப்படை நன்றி

ABOUT THE AUTHOR

...view details