தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காண்டூர் கால்வாய்: வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்ட சிறுமியின் உடல் மீட்பு!

கோயமுத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள காண்டூர் கால்வாயில் சர்க்கார்பதி பழங்குடி இன மக்களின் குடிசைகள் அடித்து செல்லப்பட்ட சம்பவத்தில் காணாமல் போன சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது .

DEAD

By

Published : Aug 14, 2019, 12:53 AM IST

Updated : Aug 14, 2019, 9:47 AM IST



மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்குச் செல்லும் மலைப் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்க்கார்பதி மலையிலிருந்து பாறை ஒன்று உருண்டு காண்டூர் கால்வாயில் விழுந்ததில் அடைப்பு ஏற்பட்டது.

இதனால் கால்வாயிலிருந்து வெளியேறிய காட்டாற்று தண்ணீர் சர்க்கார்பதி பகுதியில் உள்ள நாகூர்ஊற்று பழங்குடி மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இங்கு 30க்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள் வசித்து வந்தனர். அவர்களது குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் அழகம்மாள் என்பவரின் இரண்டு வயது பெண் குழந்தை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்ட சிறுமியின் படம்

இதைத் தொடர்ந்து, வனத்துறைக்கு தகவல் கொடுக்கபட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், தண்ணீரில் சிக்கித்தவித்த பழங்குடி இன மக்களை மீட்டனர். பின்னர் அவர்களை சர்க்கார்பதி மின்வாரிய குடியிருப்புப் பகுதியில் தங்க வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த ஆறு நபர்களுக்கு பொள்ளாச்சி, கோவை ஆகிய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காண்டூர் கால்வாயில் சிறுமியின் உடல் மிட்பு

மேலும், தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இரண்டு வயது குழந்தை அருகில் உள்ள பீடர் கால்வாயில் இருக்கலாம் என்ற நோக்கில் வனத்துறையினர் அங்கு தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஐந்து நாட்களாக வனத்துறையினர் இரவு பகலாக தேடிய நிலையில், காண்டூர் கால்வாயில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டு வேட்டைகாரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Last Updated : Aug 14, 2019, 9:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details