தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மருத்துவமனையை அபகரிக்க முயன்றதாக 5 பேர் மீது வழக்கு; சிபிசிஐடி 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

கோவையில் மருத்துவமனைக்குள் அத்துமீறி சென்று நோயாளிகளையும் ஊழியர்களையும் வெளியேற்றி மருத்துவமனையை அபகரிக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. மேலும் அவர்களை 5 நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை நீதிமன்றம்
கோவை நீதிமன்றம்

By

Published : Jun 16, 2022, 11:21 AM IST

கோவையில் உள்ள சென்னை மருத்துவமனைக்குள் (தற்போது எல்லன் மருத்துவமனை) நுழைந்து நோயாளிகளையும் ஊழியர்களையும் வெளியேற்றி மருத்துவமனையை அபகரிக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் எல்லன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராமச்சந்திரன், மருத்துவர் காமராஜ் , மூர்த்தி, முருகேசன், பழனிச்சாமி ஆகிய 5 பேரையும் சிபிசிஐடி காவல்துறையினர் நேற்று முன்தினம் (ஜூன்13) கைது செய்தனர்.

இந்நிலையில் 5 பேரும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மனு மீதான விசாரணையை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பாஸ்கர் உத்தரவிட்டார்.


மேலும், அவர்களை 7 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்ட நிலையில் 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: Online loan App scams:ஆன்லைன் லோன் செயலி மோசடியில் சிக்கத் தவிக்கவேண்டாம் - டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details