கோவை மாவட்டம் சிங்காநல்லூர் நீலிகோணம்பாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வினோத் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்துள்ளார். ஆட்டோவில் அவரது இரு குழந்தைகளுடன் வந்தவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் இறங்கி, அவரெடுத்து வந்த மண்ணெண்ணையை திடீரென தன் மீது ஊற்றிக் கொண்டார்.
உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் அவரை இழுத்துச் சென்று அவரின் மீது தண்ணீர் ஊற்றி மண்ணெண்ணையை அகற்றினர். அழைத்து வந்த அவரது இரு குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின் அவரை காவலர்கள் இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை அறிவிப்பு!
அவரை அழைத்துச் சென்றபோது அவர் ஆட்டோவில் உள்ள மனுவில் விவரங்கள் எழுதியுள்ளது என்று கூறினார். அவர் வைத்திருந்த மனுவில் அவர் பெயர் வினோத் என்றும், அவரது மனைவி மங்கலா என்றும், அவரது மனைவியின் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் இணைந்து தனக்கு துரோகம் விளைவித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.