தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள்! - சீமான் அறிவிப்பு!

கோவை: நாம் தமிழர் கட்சி சார்பில் வரும் தேர்தலில் 117 பெண் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

tamilar
tamilar

By

Published : Jan 27, 2021, 6:04 PM IST

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கோவை மண்டல வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, “சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 117 இடங்களில் பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தேசிய மற்றும் திராவிட கட்சிகளையே நாம் தமிழர் கட்சிதான் வழிநடத்துகிறது. சுற்றுச்சூழல் பாசறை முதன்முதலில் நாங்கள் தான் தொடங்கினோம். முப்பாட்டன் முருகன் என்ற போது என்னை கேலி செய்தனர். அதையே தற்போது அனைத்து கட்சிகளும் ஓட்டுக்காக செய்கின்றன. தமிழக மீனவர்கள் படுகொலைக்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். எங்கள் ஆட்சியில் ஒரு மீனவரைக்கூட தொட முடியாது. மீறி தொட்டால் பதவி விலகி விடுவேன்.

117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள்! - சீமான் அறிவிப்பு!

ஆட்சியில் இருந்த 22 ஆண்டுகளில் தீர்க்காதவற்றையா 100 நாட்களில் திமுக தீர்க்க போகிறது? அப்படிப் பார்த்தால் திமுகதான் மக்களுக்கு பிரச்சனையே. 7 பேர் விடுதலையை ஆளுநர் கையெழுத்திட்டு விரைந்து சாத்தியப்படுத்த வேண்டும். எனக்கு ஓட்டு போட்டாலும் போடாவிட்டாலும் கவலைப்பட மாட்டேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சசிகலா விடுதலை:சேலத்தில் அமமுகவினர் கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details