தமிழ்நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் 50 க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்கள் ஆக்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடையாக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், மாத ஓய்வு ஊதியத்தை 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 7 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் முன்னாள் மாநில தலைவர் பழனிச்சாமி சத்துணவை பொறுத்தவரை மாநில அரசால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் சத்துணவில் தோல்வியுற்ற அட்சய பாத்திரம் திட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கும்போது ஆளுநர் அத்திட்டத்தை ஆதரித்து அதற்கு பணமும் கொடுக்கிறார்.