கோயம்புத்தூர்: பொள்ளாச்சி நகராட்சிக்குள்பட்ட 36 வார்டுகளில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில், 35ஆவது வார்டில் போட்டியிடும் கோயம்புத்தூர் மாவட்டச் செயலாளர் பாபு பிரசாத்தின் தந்தை டாக்டர் அழகர் ராமானுஜம், மகாலிங்கம் கல்லூரியில் 1990ஆம் ஆண்டு கல்லூரி முதல்வராகப் பதவி வகித்துள்ளார்.
தேர்தலில் மகனுக்காக வாக்குச் சேகரிக்கும் விஞ்ஞானி அதன்பின் வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளை மூலமாகப் புதிய இயற்பியல் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக உலக விஞ்ஞானிகள் மாநாட்டில் ஸ்பெயினில் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
எனினும், தனது மகன் போட்டியிடும் 35ஆவது வார்டில் உள்ள பொதுமக்களைச் சந்தித்து விஞ்ஞானி அழகர் ராமானுஜம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுகிறார். பொதுமக்களின் நலன்கருதி சமூகத்துக்கு நல்லதொரு மாற்றத்தைத் தர வேண்டுமென டாக்டர் அழகர் ராமானுஜம் தெரிவித்தார். இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: இட்லி சுட்டு வாக்குச் சேகரித்த வேட்பாளர்!