தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 10, 2020, 5:32 PM IST

ETV Bharat / city

சட்டத்திற்கு புறம்பாக விற்கப்பட்ட மீன்கள் பறிமுதல்

கோயம்பத்தூர்: வால்பாறையில் சட்டத்திற்கு புறம்பாக ஊசி மூலம் பதப்படுத்தி விற்கப்பட்ட மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சட்டத்திற்கு புறம்பாக ஓமன் நாட்டில் உள்ளதுபோல் விற்கப்பட்ட மீன் பறிமுதல்.
சட்டத்திற்கு புறம்பாக ஓமன் நாட்டில் உள்ளதுபோல் விற்கப்பட்ட மீன் பறிமுதல்.

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை மீன் மார்க்கெட் பகுதியில் மீன் கடை நடத்தி வருபவர் ஜியோ. இவர் 500 கிலோ மீன்களை வாங்கி, அதில் 400 கிலோவை வீட்டில் பதுக்கி வைத்துள்ளார். எஞ்சிய 100 கிலோ மீன்களை தனது கடையில் வைத்து விற்பனை செய்துள்ளார். ஓமன் நாட்டு முறையைப் போல் சட்டத்திற்கு புறம்பாக இவர், மீன்களைப் பதப்படுத்தியதாகத் தெரிகிறது.

இதனையறிந்த ஒருவர் பொள்ளாச்சி சார் ஆட்சியருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் வால்பாறை ஆணையர் பவுன்ராஜ், பொறியாளர் சரவண பாபு மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மீன்களைப் பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்தில் பார்வையிட்டு, அதனைக் குழி தோண்டி புதைக்க உத்தரவிட்டுள்ளனர்.

ஓமன் நாட்டு முறையில் ஊசி மூலம் பதப்படுத்தி விற்கப்பட்ட மீன்கள் பறிமுதல்

இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய் ஆகும். மேலும், ஜியோ மீது இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details