தமிழ்நாடு

tamil nadu

கோவையில் விதிகளை மீறிய கடைகள் மூடல்!

By

Published : Jun 19, 2020, 4:58 PM IST

கோவை: கரோனா ஊரடங்கு விதிகளை முறையாக பின்பற்றாத காரணத்தால் பூ மார்க்கெட் பகுதிகள் மூடப்பட்டன.

covai flower market shops were closed for violating curfew rules
covai flower market shops were closed for violating curfew rulescovai flower market shops were closed for violating curfew rules

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸின் பாதிப்புகள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, சின்னியம்பாளையம் பகுதியில் கடந்த மூன்று நாள்களில் 21 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சின்னியம்பாளையம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் வெளியே வர முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பூ மார்க்கெட் கடைகளில் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காத காரணத்தால் மாநகராட்சி நிர்வாகம் கடைகளை அடைக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் உள்ளே செல்ல முடியாதபடி சிமெண்ட் சீட்டுகளை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, சென்னை கோயம்பேடு மார்க்கெட் கரோனா வைரஸ் அதிக அளவில் பரவ காரணமாக அமைந்த நிலையில், அதே போன்ற சூழல் பூ மார்க்கெட் பகுதியிலும் ஏற்படக்கூடாது என்ற காரணத்திற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details