தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சுதந்திர தினவிழா: 'அனைவரது வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுங்கள்' - கோவை கலெக்டர் வேண்டுகோள்!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு வரும் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அனைவரது வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுதந்திர தின விழா
சுதந்திர தின விழா

By

Published : Aug 9, 2022, 9:34 PM IST

Updated : Aug 10, 2022, 10:50 AM IST

கோவை: 75ஆவது சுதந்திர தின விழாவைக்கொண்டாடும்விதமாக கோவை மாவட்டத்தில் அனைவரது வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '75ஆவது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவினை கொண்டாடும் வகையில் அனைத்து வீடுகளிலும், நிறுவனங்களிலும் தேசியக்கொடியினை ஏற்றிட தேசிய அளவிலும், மாநில அளவிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தேசியக்கொடி ஏற்றி சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவினை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேசியக்கொடியினை வீடுகளில் ஏற்றிய பின், அதனை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் எனவும், தேசியக் கொடியின் புனிதத்தன்மையை பேணும் வகையில் எவ்வித அலட்சியமும் அவமரியாதையும் இன்றி கையாள வேண்டும் எனவும், தேசியக்கொடியை திறந்த வெளியிலோ, குப்பைத்தொட்டியிலோ, வயல்வெளியிலோ எறியக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஒத்துழைப்பு நல்கி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தேசியக்கொடி ஏற்றி கொண்டாடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:75ஆவது சுதந்திர தினம்: அனைவர் வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற மாணவர்களுக்கு அறிவுரை - பள்ளிக்கல்வித்துறை

Last Updated : Aug 10, 2022, 10:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details