கோயம்புத்தூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த சக்திவேல் என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று(பிப்.3) தான் அணிந்திருந்த லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து அவரது உடல் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிறைத்துறை அளித்த புகாரின் அடிப்படையில், பந்தய சாலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.