தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொள்ளாச்சி ஆனைமலைப் புலிகள் காப்பகம்: வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

கோவை: பொள்ளாச்சி ஆனைமலைப் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட நான்கு வனச்சரகங்களில் வனவிலங்குகளைக் கணக்கெடுக்கும் பணி இன்று (டிச. 15) தொடங்கியது.

animal
animal

By

Published : Dec 15, 2020, 12:48 PM IST

Updated : Dec 15, 2020, 1:36 PM IST

கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலைப் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பொள்ளாச்சி, உலர்ந்தி, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய நான்கு வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் இருமுறை வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டு, குளிர்கால கணக்கெடுக்கும் பணி இன்று (டிச. 15) தொடங்கியது. கூடுதல் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் தலைமையில் தேசியப் புலிகள் காப்பக ஆணையத்தின் விதிமுறைகள்படி, முதற்கட்டமாக மூன்று நாள்கள் மாமிச உண்ணிகள், வனவிலங்குகளை நேரடியாகப் பார்ப்பது, எச்சங்கள், கால் தடங்கள், நகக் கீறல்கள் ஆகியவற்றைக் கொண்டு கணக்கெடுக்கும் பணியில், நவீன கருவி ஜிபிஎஸ், தூர அளவீட்டுக் கருவி கொண்டு நடைபெறுகிறது.

வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

அடுத்த மூன்று நாள்கள் பறவைகள், சைவ உண்ணிகள் கணக்கெடுக்கும் பணியும் நடைபெறும். மேலும், வன விலங்குகளுக்குத் தேவையான உணவு, தண்ணீர் போன்றவை பற்றியும், பறவைகள், அரியவகை தாவரங்கள் குறித்தும் கணக்கிடப்படுகிறது.

வனப்பகுதியில் மனிதர்களின் நடமாட்டம் உள்ளதா, வன விலங்குகள் வேட்டையாடப்படுகிறதா எனவும்; வன எல்லையில் ஆக்கிரமிப்பு உள்ளதா எனவும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்தப் பணி நிறைவுபெற்று வருகின்ற டிச. 21ஆம் தேதி அட்டகட்டி பயிற்சி மையத்தில், பணியாளர்கள் பண உதவி பாதுகாவலர் செல்வத்திடம் ஒப்படைப்பதாக பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தெரிவித்தார்.

கரோனா தொற்று காரணமாக, தன்னார்வலர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் ரூ.1.37 கோடி, 3 கிலோ நகைகள் பறிமுதல்!

Last Updated : Dec 15, 2020, 1:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details