கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொழிலதிபர் சிவசுப்பிரமணியம் வீட்டின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இந்த வீட்டின் உரிமையாளரான சிவசுப்பிரமணியத்தை கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்களும், பொதுமக்களும் போராட்டம் மேற்கொண்டு வந்தனர்.
இதனையடுத்து நேற்று காலை சிவ சுப்பிரமணியத்தை மேட்டுப்பாளையம் காவல் துறையினர் கைது செய்தனர். அவர் மீது கவனக்குறைவாக கையாண்டு மரணம் விளைவித்தல் (304 ஏ) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இத்தருணத்தில் அப்பிரிவை மாற்றி கொலைக்கு இணையான மரணத்தை ஏற்படுத்துதல் (304_2) என்ற பிரிவு தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.