சென்னையில் ஒரு கும்பல் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, தங்களது கைப்பேசி எண்ணை விளம்பரப்படுத்தியுள்ளனர். அந்த விளம்பரத்தை நம்பி பேசிய சிலரிடம், ஆதார் கார்டு, ரேசன் கார்டு உள்ளிட்டவைகளை தங்களது மண்ணடி அலுவலகத்திற்குக் கொண்டு வரவும் என்றும் கூறியுள்ளனர்.
இதை நம்பி அங்கு சென்ற சென்னை முகப்பேரைச் சேர்ந்த சந்துரு, பிரவீன்குமார், பாரிமுனையைச் சேர்ந்த பெளசியா பேகம் ஆகியோரிடம் ஆதார் கார்டு, ரேசன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்ற மீனா, சங்கர் உள்ளிட்ட சிலர், அவர்களது பெயரிலேயே கடன் பெற்று சுமார் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மடிக்கணினி, கைப்பேசி, தொலைக்காட்சி போன்ற பொருட்களையும் வாங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஆவணங்கள் மூலம் பெற்ற பொருட்களுக்கு கடனைக் கட்ட வேண்டும் என்று வீட்டிற்கு ரசீது வந்தபோது தான் சந்துரு, பிரவீன் குமார், பெளசியா பேகத்துக்கு தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்துள்ளது.