தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா? மறுவரையறை பணிகளை முடிக்க திமுக புதிய மனு!

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன் தொகுதி மறுவரையறை பணிகளை முடிக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக மனுத்தாக்கல் செய்துள்ளது.

DMK
DMK

By

Published : Nov 29, 2019, 12:26 PM IST

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன் தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட திருத்த நடைமுறைகளை பூர்த்தி செய்ய தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி திமுக ஆறு மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

மேலும், இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், வழக்கை பட்டியலிடுமாறு உத்தரவிட்டுள்ளது.

இதனால், டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக திமுக வழக்கு தொடர்ந்துள்ளதால், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details