தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிலைகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Oct 27, 2021, 3:43 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “அவினாசி சாலை சந்திப்பில் அனுமதிப் பெற்று வைக்கப்பட்டிருந்த அண்ணா சிலையின் பீடத்தை அகலப்படுத்தி, முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள இந்த சிலைகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.

தமிழ்நாட்டில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில், தலைவர்கள் மரியாதைக்கு உரியவர்கள்; எந்த அவமரியாதையும் அவர்களுக்கு ஏற்படுத்தவில்லை. ஆனால் அரசு நிலங்களை இதுபோன்று சிலைகள் அமைக்கப் பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தியது.

வழக்கு தள்ளிவைப்பு

மேலும், எதிர்காலத்தில் அனுமதியின்றி சிலைகள் அமைப்பதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்திய நீதிபதிகள், அனுமதியின்றி வைக்கப்படும் சிலைகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்றும், அதற்காக அரசு எடுத்த நடவடிக்கை, பிறப்பித்த அறிவிப்புகள் குறித்து விரிவான அறிக்கையுடன், அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஆறு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு - முன்னாள் சிறப்பு டிஜிபி மனு தள்ளுபடி

ABOUT THE AUTHOR

...view details