தமிழக சட்டப்பரேவையில் இன்று விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழப்பு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி , இச்சம்பவத்தின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
விக்னேஷ் உயிரிழப்பு விவகாரம் கொலை வழக்காக விசாரணை - முதலமைச்சர் ஸ்டாலின்
விக்னேஷ் உயிரிழந்த சம்பவம், கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் , விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழப்பு குறித்து ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் , அவரது உடற்கூறு ஆய்வு முடிவில் 13 இடங்களில் காயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறினார்.
இந்த வழக்கு தொடர்பாக காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர் , ஈரோடு மாவட்டம் உப்பிலிபாளையத்தில் முதியவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் கூறினார்.
இதையும் படிங்க விக்னேஷ் மரண வழக்கு.. வெளியான புதிய ஆதாரம்!