திருவிழா நாட்களை முன்னிட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பரிசுப் பொருட்களை இடைத்தரகர்கள் வழங்குவதாக வந்த தகவலையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக அந்த அலுவலகங்களில் கையூட்டு ஒழிப்பு காவல் துறையினர் தீவிர சோதனை செய்துவருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில், கணக்கில் வராதஏழு லட்சம் ரூபாய் பணம் பிடிபட்டுள்ளது. இதையடுத்து, கே.கே. நகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சுரேஷ்குமார் அலுவலகத்தில் நேற்று கையூட்டு ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தியதில், கணக்கில் காட்டப்படாத பணம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.